அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்த 3 வயது குழந்தை பலி

சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தது.
 | 

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்த 3 வயது குழந்தை பலி

சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தது.

வடமாநிலத்தை சேர்ந்த கோபால் என்பவர், சூளைமேடு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அதே கட்டிடத்தில் வசித்து வருகிறார் கோபால். அந்த கட்டிடத்தின் 7வது மாடியில் நேற்று விளையாடிக் கொண்டிருந்த அவரது 3 வயது குழந்தை சாரதா, திடீரென தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த குழந்தை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. இதுகுறித்து சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP