ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

கும்பகோணம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 | 

ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

கும்பகோணம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தூண்டில் விநாயகர் பேட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர், அப்பகுதியில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறி, சில இஸ்லாமியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகின. இதைத் தொடர்ந்து, கடந்த 5ம் தேதி இரவு வேலை முடித்து, ராமலிங்கம் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் சிலர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரது இரண்டு கைகளையும் வெட்டி படுகொலை செய்தனர். கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களை தடுத்ததற்காகவே அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், நிஜாம் அலி, சர்புதீன், முகமது ரியாஸ், முகமது அசாருதீன், முஹம்மது ரிஸ்வான் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில், தவ்ஃபீக் முகமது, பர்வேஸ் தவ்ஹீத், பாட்ஷா ஆகிய மேலும் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை கும்பகோணம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் குடியிருப்புக்கே கொண்டு சென்று போலீசார் ஆஜர்படுத்தினர். மூவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, மூன்று பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP