நெடுஞ்சாலையில் நின்ற காருக்குள் பிணமாக 3 பேர்.. உயிருக்கு போராடிய சிறுவன் மீட்பு..

உத்திரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் யமுனா தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று நின்றுள்ளது. இதனை அந்தவழியாக ரோந்து பணி சென்ற போலீசார் கவனித்து, கார் கதவை தட்டியுள்ளனர்.
 | 

நெடுஞ்சாலையில் நின்ற காருக்குள் பிணமாக 3 பேர்.. உயிருக்கு போராடிய சிறுவன் மீட்பு..

உத்திரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் யமுனா தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று நின்றுள்ளது. இதனை அந்தவழியாக ரோந்து பணி சென்ற போலீசார் கவனித்து, கார் கதவை தட்டியுள்ளனர். கதவை திறக்காததால் போலீசார் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, 3 பேர் சடலமாகவும், சிறுவன் ஒருவன் உயிருக்கு போராடிகொண்டு இருந்துள்ளான். 

இதைகண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக சிறுவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதை தொடர்ந்து 3 பேரின் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் நீரஜ் அவரது மனைவி நேஹா மற்றும் மகள் தன்யா ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும், காரில் சோதனை செய்தபோது, காரை ஓட்டி வந்த நபர் கையில் இருந்து துப்பாக்கி மற்றும் கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த வகையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்றபோது ஏதோ ஒரு காரணத்திற்காக நீரஜ் தனது குடும்பத்தினரை கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வழக்கு குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP