தமிழகத்தில் 2,951 பேருக்கு டெங்கு அறிகுறி: சுகாதாரத்துறை செயலர்

தமிழகத்தில் 2,951 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
 | 

தமிழகத்தில் 2,951 பேருக்கு டெங்கு அறிகுறி: சுகாதாரத்துறை செயலர்

தமிழகத்தில்  2,951 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட  சுகாதாரத்துறை செயலர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2,951 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். வடசென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது என குறிப்பிட்ட அவர், காய்ச்சல் வந்த  5 நாட்களுக்கு பிறகுதான் டெங்கு பாதிப்பு தெரியவரும் என கூறினார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP