திருப்பாவை-29

திருப்பாவை-29... எங்கள் உண்மையான ஆசை அதுவே. ஒருவேளை வேறேதும் எங்களுக்கு ஆசை எங்களை அறியாமல் ஏற்படுமாயின், அதையும் மாற்றி உமக்கு ஆட்செய்யும் கோரிக்கையாக மாற்று......
 | 

திருப்பாவை-29

நாராயணனே! தினமும் அதிகாலையிலேயே நாங்கள் எல்லாரும் கிளம்பி வந்து உன்னை தரிசித்து உன் திருவடியைப் போற்றுவது வெறும் பக்தியால் மட்டுமல்ல. எங்களின் அழுத்தமான கோரிக்கைகளை உன்னிடம் வைக்கத்தான். எங்கள் பக்தியில், அன்பில் நீ மகிழ்ந்துவிட்டு, நாங்கள் தேடி வந்த காரணத்தை மறந்து விடக் கூடாது. அதனால், திரும்பவும் சொல்கிறோம் கேள்! 

மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்து விட்டதால், நீயே எல்லா வேலைகளையும் செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொள்ளாதே! உன் திருவடி அலங்கரிப்பது முதல் சாமரம் வீசுவது வரையிலான அனைத்து குற்றேவல்களையும் செய்வது எங்களுக்கான பெரும் பாக்கியம். எனவே, வெறும் முக்தி மட்டும் கொடுத்து விட்டு விலகி விடாது, உமக்கு குற்றேவல் செய்யும் வாய்ப்பு கொடுக்கும் வண்ணம் எங்களுக்கு உத்தரவு கொடுக்காமல் போகக் கூடாது எங்கள் கோவிந்தனே! 

எல்லா உயிர்களுக்கும் ஏழு ஏழு பிறவிகளைக் கொடுக்க கூடிய கோவிந்தா, எங்களுக்கு அந்த நிலையைக் கொடுத்து விடாமல் என்றைக்கும் உன்னுடனே வைத்துக் கொள். நாங்கள் உன்னுடன் இருந்து உனக்கான ஆட்களாகவே ஆவோம். உனக்கான பணிகளையே எப்பொழுது செய்து கிடப்போம். ( அப்பா நானும் உங்கள் கூட வரட்டுமா என்று கேட்கும் குழந்தை போல் இல்லாமல்,  நானும் உங்க கூடத் தான் வருவேன் என்று அடம்பிடிக்கும் குழந்தை போல் உறுதியாகச் சொல்லிவிட்டார்)

எங்கள் உண்மையான ஆசை அதுவே. ஒருவேளை வேறேதும் எங்களுக்கு ஆசை எங்களை அறியாமல் ஏற்படுமாயின், அதையும் மாற்றி உமக்கு ஆட்செய்யும் கோரிக்கையாக மாற்று. 

சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன் 
    பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் 
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து நீ 
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது 
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா 
    எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு 
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் 
    மற்றை நம் காமங்கள் மாற்று-ஏலோர் எம்பாவாய்  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP