பொங்கல் பண்டிகையையொட்டி 28708 சிறப்பு பேருந்துகள்; 9ஆம் தேதி முதல் முன்பதிவு தொடக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14,263 பேருந்துகள் சென்னையிலிருந்தும், தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்
 | 

பொங்கல் பண்டிகையையொட்டி 28708 சிறப்பு பேருந்துகள்; 9ஆம் தேதி முதல் முன்பதிவு தொடக்கம்!

பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்து  சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டு 11,000 க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 14,263 பேருந்துகள் சென்னையிலிருந்தும், தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படும் என்றும் தெரிவித்தார். சென்ற ஆண்டு 4,92,220 பேர் பயனம் செய்துள்ள நிலையில் நிகழாண்டு ஆண்டு 6 லட்சம் பேர் பயனம் செய்ய வாய்ப்புள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகையையொட்டி 28708 சிறப்பு பேருந்துகள்; 9ஆம் தேதி முதல் முன்பதிவு தொடக்கம்!

பண்டிகை முடிந்து பிறகும் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மாதவரம்,மெம்ப்ஸ், தாம்பரம்,கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பேருந்துகளுக்கான முன்பதிவு வரும் 9 ஆம் தேதி தொடங்கப்படும். தனியார் பேருந்துகள் மீது குற்றசாட்டு வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளதாகவும் தெரிவித்தார். 
பொது மக்கள் தங்கள் புகார்களை 18004256151 என்கின்ற Tollfree எண் மூலம் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.  விரைவில் அடுத்த கூட்டம் வரும் 2ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அன்று பேருந்துகளின் விபரங்கள் வெளியிடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP