26 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம்!

தமிழகத்தில் 26 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்து உள்துறைச் செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 | 

26 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம்!

தமிழகத்தில் 26 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்து உள்துறைச் செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதில், சென்னை தெற்கு கூடுதல் ஆணையராக இருந்த மகேஷ் குமார் அகர்வால், காவல்துறை ஆபரேசன் பிரிவு ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும், மாநில குற்ற ஆவண காப்பகத்தின் ஏ.டி.ஜி.பியாக வினித் தேவ் வாங்டே பதவி உயர்வு பெற்றுள்ளார். அதோடு, சைபர் கிரைமிற்கு தனிபிரிவு உருவாக்கப்பட்டு அதற்கு ஏ.டி.ஜி.பியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், டி.ஜி.பி கரன் சின்ஹாவை போலீஸ் கல்லூரி டி.ஜி.பி யாகவும், முக்கியமாக நீண்ட காலமாக உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த ஈஸ்வர மூர்த்தி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டி.ஐ.ஜி உளவுத்துறையாக கண்ணன் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையை பொறுத்தவரை தெற்கு கூடுதல் ஆணையராக பிரேமானந்த் சின்ஹாவும்,  சென்னை காவல் நிர்வாகத்துறை ஐ.ஜியாக அன்புவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். சென்னை போக்குவரத்து இணை ஆணையர் சுதாகர், சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ரயில்வே டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன், திருச்சி சரக டி.ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல், 26 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP