சென்னை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் 25 மணி நேரமாக நடைபெற்ற சோதனை!

குட்கா ஊழல் புகாரில் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

சென்னை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் 25 மணி நேரமாக நடைபெற்ற சோதனை!

குட்கா ஊழல் புகாரில் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குட்கா ஊழல் வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டதையடுத்து, தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் தங்கள் அதிரடி சோதனையை தொடங்கினர். குட்கா விற்பனையாளர் மாதவராவின் வீட்டில் கிடைத்த டைரியின் அடிப்படையில் ரெய்டு நடைபெறுகிறது. நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி ஜார்ஜ், தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீட்டில் சோதனை நடைபெற்றது. இதில், சென்னை நொளம்பூரில் உள்ள ஜார்ஜ் வீட்டில் நேற்று விடிய விடிய சோதனை நடைபெற்ற நிலையில் இன்று  காலையிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், ஜார்ஜ் வீட்டில் சோதனை நிறைவு பெற்றுள்ளதாக சிபிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜார்ஜ் வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகம், புதுவை, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP