அத்தி வரதரை குளத்திற்குள் வைக்கும் நிகழ்வில் 253 பேருக்கு அனுமதி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதரை அனந்தசரஸ் குளத்திற்குள் வைப்பதற்கு 253 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 | 

அத்தி வரதரை குளத்திற்குள் வைக்கும் நிகழ்வில் 253 பேருக்கு அனுமதி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதரை அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள 253 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அத்தி வரதர் வைபவ விழா இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, இன்று மீண்டும் அத்தி வரதர் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுகிறார்.இது  40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வாகும். அத்தி வரதரை திருக்குளத்தில் வைக்கப்படும் நிகழ்வுக்கு 253 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை தகவல் தெரிவித்துள்ளது. அதில், 15 பட்டாச்சாரியார்கள், வல்லுநர் குழுவைச் சேர்ந்த 20 பேர், 50 பணியாளர்கள், பத்திரிக்கை துறையை சேர்ந்த நிருபர்கள் உள்ளிட்ட 253 பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP