குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.25 லட்சம் வசூல்

மதுரையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.25.10 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
 | 

குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.25 லட்சம் வசூல்

மதுரையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.25.10 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை போக்குவரத்து காவல்துறை, ’குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை 251 பேரிடம் ரூ.25.10 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. போதையில் வாகனம் ஓட்டியதாக 251 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் நடைமுறை தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP