24-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

24-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!
 | 

24-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

24-09-2018 இன்றைய நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகளின் தொகுப்பு!

முழு நம்பிக்கை உள்ளது: ஆளுநரை சந்தித்த பின் அற்புதம்மாள் பேட்டி

24-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று ஆளுநரை நேரடியாக சந்தித்து பேசினார். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறியதை அடுத்து, எனக்கு அவர் மேல் முழு நம்பிக்கை வந்துள்ளது என அற்புதம்மாள் தெரிவித்தார். 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் ஸ்டாலின், டிடிவி தினகரன் பெயர்!

24-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

தமிழக அரசு சார்பில் வருகிற 30ம் தேதி சென்னை நந்தனம் மைதானத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால், அவர்கள் பங்கேற்பார்களா என்பது பற்றி தகவல் இல்லை.  

எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார் கருணாஸ்!

24-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

தமிழக காவல் துறையையும் முதல்வரையும் அவதூறாக பேசியதால் கைது செய்யப்பட்டுள்ள கருணாஸ், ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வருகிற 26ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலை குறித்து சென்னையில் கருத்துக்கேட்பு கூட்டம்!

24-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

சென்னை சேப்பாக்கம் கலச மஹாலில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்துகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு நேற்று தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

24-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான, ஜலந்தர் பகுதிக்கான பிஷபாக இருந்த பிராங்கோ முலக்கல்லை கேரள போலீசார் கைது செய்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து, கோட்டயம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பிராங்கோவின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

சிக்கிம் மாநில பாக்யாங் நகரில் அமைக்கப்பட்டுள்ள அம்மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ரூ.605 கோடி மதிப்பில், கடல்மட்டத்திற்கு மேலே 4500 அடி என்ற அளவில், சுமார் 201 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், இந்திய- சீனா எல்லையில் இருந்து 60 கி.மீ தொலைவிலும் உள்ளது.  

மாலத்தீவு அதிபராக எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: முடிவை அறிவிப்பதில் இழுபறி

24-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 58.3 சதவிகித வாக்குகள் பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனை அடுத்து மாலத்தீவு ஜனநாயக கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அரசு உதவிபெறுபவர்களுக்கு க்ரீன் கார்டு கிடையாது!: ட்ரம்ப் அதிரடி

24-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

அமெரிக்காவில் குடியேற முயற்சிக்கும் மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு, அடுத்ததாக, அரசு உதவிபெறுவோருக்கு க்ரீன் கார்டு வழங்குவதை நிறுத்த முடிவெடுத்துள்ளது. 

டிராவிட்டை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடம் பிடித்த தோனி! எதில் தெரியுமா?

24-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

ஆசியக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியின் மூலம் இந்தியாவிற்காக அதிக போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் எனும் பெருமையை மகேந்திர சிங் தோனி பெற்றுள்ளார். இந்த பட்டியலில் 664 போட்டிகளில் விளையாடிய, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்துக்கு திராவிட் தள்ளப்பட்டுள்ளார்.

சர்கார் சிங்கிள் பற்றிய சுவாரஸ்ய தகவல்!

24-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

தினம் தினம் சர்கார் சம்பந்தமாக ஏதாவது ஒரு சுவாரஸ்ய முடிச்சை அவிழ்த்து, ரசிகர்களை உற்சாகப் படுத்தி வருகிறது அப்படத்தின் தரியாரிப்பு நிறுவனம். அதன் தொடர்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் வெளியாகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP