+2 தேர்வில் புதிய கட்டுப்பாடுகள்! பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

+2 தேர்வில் புதிய கட்டுப்பாடுகள்! பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
 | 

+2 தேர்வில் புதிய கட்டுப்பாடுகள்! பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் பிளஸ் 2  மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் வரும் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தேர்வுக்கான ஆயத்த பணிகளில் பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறை முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறது. தேர்விற்கான வினாத்தாள் தயாரிப்பு, தேர்வு மையம் ஒதுக்கீடு, மாணவர்களின் இறுதி பட்டியல் தயாரித்தல் என பொதுத் தேர்வுக்கான வேலைகளை துரிதப்படுத்தி இருக்கிறது.

பொதுத் தேர்விற்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி முதல் வாரத்திற்குள் முடிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான முன் ஏற்பாடாக ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்முறை தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை திரட்டவும் உத்தரவிடப் பட்டுள்ளது.செய்முறை தேர்வுக்கு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட உள்ள அக மதிப்பீட்டாளர் மற்றும் செய்முறை தேர்வு கண்காணிப்பாளரையும் இறுதி செய்து பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

செய்முறை தேர்வு எழுத ஒரு பள்ளியில் ஒரு பாட பிரிவில் குறைந்தபட்சம் 30 மாணவர்கள் இருந்தால் மட்டுமே அதே பள்ளியில் செய்முறை தேர்வுக்கு மையம் அமைக்க வேண்டும். அதை விட குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் அருகில் உள்ள பள்ளிகளில் செய்முறை தேர்வு மையம் அமைக்கப்படும்  என்றும் புதிதாக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP