ராமநாதபுரத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமல்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 | 

ராமநாதபுரத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமல்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக் கருதி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. 

மேலும், இன்று முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை பிற மாவட்ட வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் 25 முதல் 31ஆம் தேதி வரை பிற மாவட்ட வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP