Logo

சென்னை: போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் 13 பேர் கைது

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு போலி பாஸ்போர்ட் தயார் செய்து தந்ததாகக் கூறி 13 பேரை கியூ பிரிவு காவல்துறையினர் இன்று கைது செய்து சைதாப்பேட்டை நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி சண்முக பிரியா முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
 | 

சென்னை, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் நபர்கள் 13 பேரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து சைதாப்பேட்டை நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி சண்முக பிரியா முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

இந்த 13 பேரும் கள்ளத் தோணியில் வருபவர்கள், மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பலருக்கும் போலி பாஸ்போர்ட் தயார் செய்து கொடுத்ததன் அடிப்படையில், கியூ பிரிவு காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கைது செய்யப்பட்டுள்ள 13 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன் போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்து தங்கியிருந்த தனுகா ரோஷன் என்னும் நபரை பூந்தமல்லி அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கியூ பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP