ஹெல்மெட் அணியாமல் சென்ற 1.18 லட்சம் பேர் மீது வழக்கு

தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,18,018 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

கடந்த 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது. 

இந்த சோதனையில், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 36,835 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் சென்ற 1.18 லட்சம் பேர் மீதும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 28 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், வாகனங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தியதாக 542 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP