10வயது சிறுமியிடம் அத்துமீறிய முதியவர்..!

டியூசன் சென்று விட்டு வந்த சிறுமியிடம் நடுரோட்டில் அத்துமீறிய முதியவர் கைது செய்து சிறையில் அடைப்பு..
 | 

10வயது சிறுமியிடம் அத்துமீறிய முதியவர்..!

10வயது சிறுமியிடம் நடுரோட்டில் அத்துமீறிய முதியவர் 

சென்னை அம்பத்தூரை அடுத்த லெனின் நகர், 2வது மெயின் ரோட்டில் வசித்து வரும் 10வயது சிறுமி, 6 வயது  தங்கையுடன் வழக்கம் போல் கடந்த 30ஆம் தேதி அருகில் உள்ள டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியாரான சுந்தரமூர்த்தி (73) என்பவர் 10வயது சிறுமியை தனியாக அழைத்து பேசியுள்ளார். அப்போது, அங்கு யாரும் இல்லாததால் சிறுமியின் கன்னத்தில் முத்தமிட்டதுடன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த அந்த சிறுமி அலறி கூச்சலிடவும் சுந்தமூர்த்தி அங்கிருந்து ஓடியுள்ளார். சத்தம் கேட்டு வந்து பொதுமக்கள் சிறுமியை அவரது வீட்டில் பத்திரமாக கொண்டு சேர்த்தனர். இதையடுத்து சிறுமி அவரது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். சிறுமி கூறிய தகவலின் படி அவரது பெற்றோர் நேற்று அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  தலைமறைவான சுந்தரமூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP