10,12ஆம் வகுப்பு புதிய பாட புத்தகம் விற்பனை!

2019-20 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.
 | 

10,12ஆம் வகுப்பு புதிய பாட புத்தகம் விற்பனை!

2019-20 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை மாற்றியமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் முதல் கட்டமாக 1, 6, 9,  பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்தனர்.

 க்யூ.ஆர். குறியீடு,  பொது அறிவுத் தகவல்கள் என பல்வேறு புதிய விஷயங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டம் கல்வியாளர்கள்,  பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  

இதைத் தொடர்ந்து ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி  2, 7, 10, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, அச்சடிக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, தேவையான புதிய பாடப்புத்தகங்களை தனியார் பள்ளிகள் பதிவு செய்து பெற்றுகொள்ளலாம் என பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.

மேலும் 12-ம் வகுப்பு தாவரவியல், விலங்கியலுக்கு ஒரே புத்தகம் தான் எனவும், 3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்குமான புதிய பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP