சூலூரில் தள்ளாத வயதிலும் வந்து வாக்களித்த 103 வயது மூதாட்டி!

சூலூரில் 103 வயது மூதாட்டி ஒருவர், தள்ளாத வயதிலும் வந்து ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
 | 

சூலூரில் தள்ளாத வயதிலும் வந்து வாக்களித்த 103 வயது மூதாட்டி!

சூலூரில் 103 வயது மூதாட்டி ஒருவர், தள்ளாத வயதிலும் வந்து ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று(மே 19) இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில், சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் 103 வயது மூதாட்டி ஒருவர் வந்து வாக்களித்துள்ளார். நடக்க முடியாத நிலையிலும், அவர் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்துள்ளது. உறவினர் இருவர், அவரை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து வாக்களிக்க வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும்,மக்களிடையே வாக்களிக்க வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. 

வழக்கமாக வாக்களிக்கும் ஆர்வம் தற்போது மக்களிடையே குறைந்து வருகிறது என்று பேசப்படும் நிலையில், அது தவறு என்பதை இவர் போன்ற மூத்த குடிமக்கள் வந்து வாக்களித்து நிரூபித்து விட்டனர் என்று கூறலாம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP