10% இட ஒதுக்கீடு: நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்

10% இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக வரும் 8ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 | 

10% இட ஒதுக்கீடு: நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்

10% இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக வரும் 8ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்ற போது, திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ஆலோசிக்க வேண்டும் என கூறினார். 

இதையடுத்து முதலமைச்சர் பழனிசாமி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்படும் என உறுதிபட தெரிவித்திருந்தார். இந்நிலையில், வரும் 8 ஆம் தேதி  அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் (8ஆம் தேதி) மாலை 5.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், இதில் 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP