Logo

அரசு மருத்துவமனையில் 2 நாட்களில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

அரசு மருத்துவமனையில் 2 நாட்களில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
 | 

அரசு மருத்துவமனையில் 2 நாட்களில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஜே.கே. லோன் தாய்சேய் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 48 மணி நேரத்திற்குள் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. 
முன்கூட்டியே பிறந்துவிடும் பிஞ்சுக் குழந்தைகளை பாதுகாக்க மருத்துவமனையில் பெடியாட்ரிக் கேர் யூனிட் எனப்படும் PICU பிரிவு செயல்படுகிறது. கடந்த நான்கு நாட்களில் பிறந்த குழந்தைகள் இங்கு வைக்கப்பட்டிருந்தன.

அரசு மருத்துவமனையில் 2 நாட்களில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

இதில் டிசம்பர் 23ம் தேதி திடீரென 6 குழந்தைகளும் அதையடுத்து 24ம் தேதி 4 குழந்தைகளும் மரணம் அடைந்துவிட்டன. அதிர்ச்சியளிக்கும் இந்த சம்பவத்தால் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு ஒன்று ஜெய்ப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP