விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள்!! தூத்துக்குடியில் வலுக்கும் போராட்டம்!

ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை குறிப்பிடப்பட்டுள்ள வழித் தடங்களில் அமைந்திருக்கும் விவசாய நிலங்கள், நீரோடைகள், உப்பளங்கள், மானாவாரி விவசாய நிலங்கள் அனைத்தும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அருகிலேயே அரசு நிலம் இருப்பதாகவும், அந்த வழியே குழாய்கள் கொண்டுசெல்லப்படாமல் விவசாய நிலங்களில் அனுமதி இன்றி குழாய் பதிப்பு பணி நடைபெறுவதால் அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 | 

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள்!! தூத்துக்குடியில் வலுக்கும் போராட்டம்!

சென்னை எண்ணூர், திருவள்ளூர், பெங்களூரு, புதுச்சேரி, நாகப்பட்டினம், மதுரை, தூத்துக்குடி வரை  எரிவாயு குழாய் பதிப்பதற்காக 2017ல் மத்திய சுற்றுச் சூழல் நிறுவனத்தின் அனுமதி அளித்திருக்கிறது.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனால் இத்திட்டம் 2017முதல்  தொடங்கப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம், மறவன்கரிசல்குலத்தில் இருக்கும் ONGC  எரிவாயு சேமிப்பு நிலையத்தில் இருந்து ,இயற்கை எரிவாயு மற்றும்  திரவ இயற்கை எரிவாயுவை  குழாய்கள் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்பிக், ஸ்டெர்லைட், தாரங்கதாரா கெமிக்கல் ஆகிய நிறுவனங்களுக்கு விநியோகிப்பதே இத்திட்டத்தின் செயல்படுத்தப் படுவதன் முக்கிய காரணம்.

                                         விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள்!! தூத்துக்குடியில் வலுக்கும் போராட்டம்!

ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை குறிப்பிடப்பட்டுள்ள  வழித் தடங்களில் அமைந்திருக்கும் விவசாய நிலங்கள், நீரோடைகள், உப்பளங்கள், மானாவாரி விவசாய நிலங்கள் அனைத்தும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அருகிலேயே அரசு நிலம் இருப்பதாகவும், அந்த வழியே குழாய்கள் கொண்டுசெல்லப்படாமல் விவசாய நிலங்களில் அனுமதி இன்றி குழாய் பதிப்பு பணி நடைபெறுவதால் அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கான இழப்பீடுகள் எதுவும் இதுவரை வழங்கப்பட வில்லை எனவும், பயிர் பாதுகாப்பு குறித்தும் வலியுறுத்தி பிப்ரவரி22 தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் எனவும் விவசாயிகள் கூறி வருகின்றனர்.இந்தியன் ஆயில் ஊழியர்கள் மார்ச் 31ம் தேதிக்குள் பணி முடிக்கப்பட்டு ஆலைகள் இயங்க வேண்டும். மாற்றுப்பாதைக்கு அனுமதி பெற கால அவகாசம் இல்லை.அதனால் பணிகள் துரிதப்படுத்தப்படுகின்றன. இல்லையெனில் அனுமதி ரத்து செய்யப்பட்டு விடும் எனவும் கூறியுள்ளனர்.

                                            விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள்!! தூத்துக்குடியில் வலுக்கும் போராட்டம்!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்,  97% பணிகள் நிறைவடைந்து இருக்கின்றன.  இழப்பீடு வழங்கிய பகுதிகளில் மட்டுமே குழாய்கள் பதிக்கப்படுகின்றன.மாற்றுப்பாதையில்  தொழில்நுட்ப பிரச்னைகள்  ஏற்பட வாய்ப்பு அதிகம். நிலம் வழங்காதவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல முடிவு எட்டப்பட்டு விடும். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் பெருமளவு வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கும்  என்று கருத்து தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP