சாப்பாட்டை தட்டிவிட்டதால் ஆத்திரம்! தந்தையை கொன்ற மகன்!

சாப்பாட்டை தட்டிவிட்டதால் ஆத்திரம்! தந்தையை கொன்ற மகன்!
 | 

சாப்பாட்டை தட்டிவிட்டதால் ஆத்திரம்! தந்தையை கொன்ற மகன்!

சென்னை திருமங்கலம், காந்தி நகரைச் சேர்ந்தவர் பழனி(60). இவருடைய மகன் கருப்பையா (30). திருமணமான கருப்பையாவின் நடவடிக்கை சரியில்லையென அவரது மனைவி, கருப்பையாவைப் பிரிந்து சென்று விட்டார். இதனால் கருப்பையா பெற்றோருடன் வசித்து வந்தார். தந்தைக்கும், மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் கருப்பையா, வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பழனி, கருப்பையாவின் சாப்பாட்டு தட்டை தட்டி விட்டதால், தந்தைக்கும் மகனுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், கருப்பையா, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை என்றும் பாராமல் பழனியை சரமாரியாக வெட்டினார்.  தலை, கை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பழனி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் பழனியை மீட்டு கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே பழனி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பெற்ற மகனே கொடூரமாக தந்தையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP