மறந்துடாதீங்க! (FasTag) பாஸ்ட் டேக் கார்ட்  எப்படி பயன்படுத்துவது? ரீசார்ஜ் செய்வது? 

மறந்துடாதீங்க! (FasTag) பாஸ்ட் டேக் கார்ட் எப்படி பயன்படுத்துவது? ரீசார்ஜ் செய்வது?
 | 

மறந்துடாதீங்க! (FasTag) பாஸ்ட் டேக் கார்ட்  எப்படி பயன்படுத்துவது? ரீசார்ஜ் செய்வது? 

சுங்கசாவடிகளில் வாகனங்கள் பணம் செலுத்தும் முறைக்கு பாஸ்ட் டேக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், பாஸ்ட் டேக் பெறுவதற்கான காலகெடுவை தற்சமயம் ஜனவரி மாதம் 15ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது.

மறந்துடாதீங்க! (FasTag) பாஸ்ட் டேக் கார்ட்  எப்படி பயன்படுத்துவது? ரீசார்ஜ் செய்வது? 

பாஸ்ட் டேக் கார்டை எப்படி பயன்படுத்துவது, கார்டில் உள்ள பணம் தீர்ந்ததும் எப்படி ரீ சார்ஜ் செய்வது என்றும் பார்க்கலாம்.

பாஸ்ட் டேக் கார்டை வாங்கியதும், நீங்கள் உங்கள் வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் உள் பக்கமாக அதைப் பொருத்திக் கொள்ள வேண்டும். அப்படி பாஸ்ட் டேக் கார்டை நீங்கள் உங்களது வாகனத்தில் பொருத்திக் கொண்ட பின்னர், சுங்கசாவடியில் பாஸ்ட் டேக் வாடிக்கையாளர்களுக்காக உள்ள தனி பாதையில் நீங்கள் செல்லும் போது உங்கள் காரின் பாஸ்ட் டேக் கார்டு மூலமாக உங்கள் வாகனத்தின் வருகை உடனடியாக சுங்கசாவடிகளில் உள்ள ஸ்கேனர் கருவி மூலமாக தன்னியல்பாக பதிவு செய்யப்பட்டு உங்கள் பாஸ்ட் டேக் கார்ட்டில் உள்ள தொகையில் இருந்து அந்த குறிப்பிட்ட சுங்கசாவடி கட்டணம் மட்டும் கழித்துக் கொள்ளப்படும். 

மறந்துடாதீங்க! (FasTag) பாஸ்ட் டேக் கார்ட்  எப்படி பயன்படுத்துவது? ரீசார்ஜ் செய்வது? 

இந்நிலையில், நீங்கள் வாங்கியிருக்கும் பாஸ்ட் டேக் கார்டுகளை பயன்படுத்தியதும் மீண்டும் ரீசார்ஜ் செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.
பாஸ்ட் டேக் வாடிக்கையாளர்கள் ஒரு முறைக்கு ரூ 100 முதல் ரூ 1 லட்சம் வரை ரீ சார்ஜ் செய்துக் கொள்ளலாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, மற்றும் ஆன்லைன் மூலமாக இந்த பாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம். இது தவிர, வாகனங்களில் செல்லும் போது, நீங்கள் கடக்கும் சுங்கசாவடிகளிலும் நேரடியாக ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP