1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில், மெட்ரோவுடன் இணையும் பறக்கும் ரயில்கள்! பணிகளை துரிதப்படுத்திய ரயில்வே நிர்வாகம்!

சென்னையில், மெட்ரோவுடன் இணையும் பறக்கும் ரயில்கள்! பணிகளை துரிதப்படுத்திய ரயில்வே நிர்வாகம்!

சென்னை நகர் முழுவதையும் ரயில் சேவையில் இணைக்கும் முயற்சியில் தமிழக அரசு முனைந்துள்ளது. தற்போது சென்னையில், சென்ட்ரல், எழும்பூர், கிண்டியை போல் பரங்கிமலையும் முக்கிய போக்குவரத்து சந்திப்பாக உருவாகி வருகிறது.

எனவே, தென்னக ரயில்வே துறையினர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தி வருகின்றனர். இருக்கைகள் அமைத்தல், நடைமேடைகள் விரிவாக்கம், தேவையற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றம் என அனைத்து பணிகளும் விரைந்து முடிக்கப்படுகிறது. இதே போல், ஆலந்தூரில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்ல வசதியாக புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணியும் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் பரங்கிமலை ரயில் நிலையம் முக்கிய போக்குவரத்து சந்திப்பாக மாறி வருகிறது. மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ஆலந்தூரின் முக்கியமான சாலையும் இந்த பகுதியில் இணைக்கப்படுவதால், மக்களின் வருகையும் இந்த பகுதிகளில் அதிகரித்துள்ளது. பறக்கும் ரயில் நிலையமும் விரைவில் இங்கு இணைய இருப்பதால், பொதுமக்களின் பயன்பாடு மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரங்கிமலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. ஆலந்தூர் சாலை - பரங்கிமலை ரயில் நிலையம் - மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் சுமார் ரூ.6 கோடி செலவில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படிகளுடன் எஸ்கலேட்டர் வசதியும் அமைக்கப்படுகின்றன. இந்தப் பணிகள் அடுத்த 6 மாதங்களில் நிறைவடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சென்னையில் பறக்கும் ரயிலுடன் மெட்ரோ ரயில் சேவையும் இணைய இருப்பது குறித்து பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்!

newstm.in

Trending News

Latest News

You May Like