1. Home
  2. தமிழ்நாடு

எஸ்.ஐ எழுத்து தேர்வில் பிட் அடித்த முதல்நிலை காவலர்..

எஸ்.ஐ எழுத்து தேர்வில் பிட் அடித்த முதல்நிலை காவலர்..

எஸ்.ஐ பணிக்கான, காவல்துறையினர் ஒதுக்கீட்டு பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கு விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் எழுத்து தேர்வு நடந்தது. எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் டிஎஸ்பிக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் அனந்தபுரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றும் மணி என்பவர் கலந்து கொண்டு தேர்வெழுதினார். அவர் உடலில் மறைத்து வைத்திருந்த துண்டு சீட்டுகளை வைத்து பிட் அடித்து எழுதியுள்ளார்.

அப்போது சோதனைக்கு வந்த டிஎஸ்பி ரவீந்திரன், பிட் அடித்த முதல்நிலை காவலர் மணியை கையும் களவுமாக பிடித்தார். பின்னர் தேர்வு நடத்தும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து மணியை தேர்வெழுத அனுமதி மறுத்து, உடனடியாக தேர்வு மையத்திலிருந்து வெளியேற்றினர். மேலும், துறைத்தேர்வு எழுத அவருக்கு மூன்று ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிட் அடித்த மணி மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

'தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை' என்ற பழமொழி உண்டு. அந்த வகையில் பள்ளித் தேர்வில் பிட் அடித்து தேர்ச்சி பெற்று அடுத்து பணி உயர்வுக்கான தேர்வில் பிட் அடித்த காவலர் சிக்கியதாக கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like