மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு! பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்!

லிப்ட் தருவதாக கூறி சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்
 | 

மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு! பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்!


பைக்கில் லிப்ட் தருவதாகக் கூறி, சிறுமியை அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். 

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், பெற்றோரிடம் சண்டையிட்டு வீட்டிலிருந்து வெளியேறி, திருச்சானூர் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அதே வழியில் பைக்கில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற இளைஞர் சிறுமியைப் பார்த்ததும், லிப்ட் தருவதாகக் கூறி, பைக்கில் ஏற்றிக் கொண்டுள்ளார். ஒரு இடத்தில் வந்ததும் பெட்ரோல் தீர்ந்துவிட்டதால் வாங்கி வருவதாகக் கூறி, சிறுமியை அங்கேயே நிற்க வைத்துவிட்டு சென்றுள்ளார். 
மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு! பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்!

பின்னர்  சிறிது நேரத்தில் தனது நண்பர் ராஜமோகன் நாயக் என்பவருடன் அங்கு வந்த வெங்கடேஷ், சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இழுத்துச் சென்று மிரட்டி,  இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இதனால் அழுதுக் கொண்டே வீட்டிற்கு திரும்பிய சிறுமி தமக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர். விசாரணையில், ராஜ்மோகன் நாயக் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP