'என் மகனை அடிக்க நீ யார்' வகுப்பறையில் வைத்து ஆசிரியரை பெல்ட்டால் தாக்கிய தந்தை!

'எப்படி என் மகனை தண்டிக்கலாம்' வகுப்பறையில் வைத்து ஆசிரியரை பெல்ட்டால் தாக்கிய தந்தை!
 | 

'என் மகனை அடிக்க நீ யார்' வகுப்பறையில் வைத்து ஆசிரியரை பெல்ட்டால் தாக்கிய தந்தை!

புதுவையில் உள்ள தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் எட்வின் ராஜ். இவர் தனது வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வைத்துள்ளார். அதற்கு தாமதமாக வந்ததாக கூறி மாணவன் ஒருவரை கண்டித்து அடித்துள்ளார். பின்னர் அந்த மாணவன் வகுப்பறையில் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்து, அவனை மீண்டும் கண்டித்துள்ளார். இதில் அந்த மாணவன் கோபித்துக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியில் சென்று விட்டதாக தெரிகிறது. 

'என் மகனை அடிக்க நீ யார்' வகுப்பறையில் வைத்து ஆசிரியரை பெல்ட்டால் தாக்கிய தந்தை!

இந்த நிலையில் அந்த மாணவனின் தந்தை பள்ளிக்கு வந்து எதற்காக என் மகனை அடித்தீர்கள்? என கேட்டு ஆசிரியர்  எட்வின் ராஜிடம் தகராறு செய்துள்ளார். மேலும் ஆசிரியர் எட்வின் ராஜை ஆபாசமாக பேசிய மாணவரின் தந்தை தான் அணிந்திருந்த பெல்ட்டால் சரமாரியாக தாக்கவும் செய்துள்ளார். இதில் காயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர்கள் மீட்டு, அவரை புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

'என் மகனை அடிக்க நீ யார்' வகுப்பறையில் வைத்து ஆசிரியரை பெல்ட்டால் தாக்கிய தந்தை!

அங்கு சிகிச்சை பெற்ற ஆசிரியர் இதுகுறித்து போலீசில் புகார் செய்ய, அவர்கள் வழக்குப்பதிவு செய்து மாணவனின் தந்தையை கைது செய்தனர். மாணவரை கண்டித்ததால் ஆசிரியரை வகுப்பறையில் வைத்தே மாணவரின் தந்தை பெல்ட்டால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP