அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின், வைகோ சந்திப்பு !

அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின், வைகோ சந்திப்பு !
 | 

அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின், வைகோ சந்திப்பு !

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கான பணிகள் ஒருபுறம் சுறுசுறுப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் மும்முரமாக செயலாற்றி வருகின்றன. 

நாடாளுமன்றத் தேர்தலில் கைக்கோர்த்த திமுக காங்கிரஸ் மதச்சார்பற்ற கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது. இந்நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திமுகத் தலைவர் முக ஸ்டாலினைச் சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தி வருகின்றனர்.

அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின், வைகோ சந்திப்பு !

அந்த வகையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலினைச் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து உள்ளாட்சித் தேர்தல்  வியூகங்கள் குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ உள்ளாட்சித் தேர்தலில் தமிழக அரசு பல குழப்பங்களைச் செய்துள்ளது என்றும், 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி வார்டு வரையறை செய்யாமல் அதிமுக அரசு மோசடி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக உறுப்பினர்களின் முதல் உத்தேசப் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் உள்ளாட்சிக் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP