1. Home
  2. தமிழ்நாடு

EPFO Jobs | 421 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

EPFO Jobs | 421 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தொழிலாளர் வைப்புநிதி கழகத்தில் 421 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
EPFO எனப்படும் தொழிலாளர் வைப்புநிதி கழகம் மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கிவருகிறது. இந்த கழகத்தில் 421 அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்துத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், சட்டம், தொழில் மேலாண்மை ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் கூடுதல் தகுதி பெற்றவர்களாக கருதப்படுகின்றனர். 30 வயதுக்கு உள்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு நிர்ணயித்துள்ள 8-வது நிலையிலான ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரூ.25 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
மேற்கண்ட தகுதிகள் உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் upsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

newstm.in

Trending News

Latest News

You May Like