வயசுக்கு வந்தாப் போதும்! பெண்ணை கடத்தி கல்யாணம் பண்ணிக்கலாம்! பகீர் கிளப்பிய நீதிமன்ற தீர்ப்பு!

உலகம் முழுக்க அனைத்து நாடுகளுக்கும் நேர்வழி என்று ஒன்று இருந்தால், அதன் எதிர்பக்கமாக பயணம் செய்வதையே கொள்கையாக பாகிஸ்தான் வைத்திருக்கும் போல. சமீபத்திய வழக்கு ஒன்றில், பெண்ணின் திருமண வயதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அதுவும் 14 வயது சிறுமியைக் கடத்தி கட்டாய திருமணம் செய்ததை
 | 

வயசுக்கு வந்தாப் போதும்! பெண்ணை கடத்தி கல்யாணம் பண்ணிக்கலாம்! பகீர் கிளப்பிய நீதிமன்ற தீர்ப்பு!

உலகம் முழுக்க அனைத்து நாடுகளுக்கும் நேர்வழி என்று ஒன்று இருந்தால், அதன் எதிர்பக்கமாக பயணம் செய்வதையே கொள்கையாக பாகிஸ்தான் வைத்திருக்கும் போல. சமீபத்திய வழக்கு ஒன்றில், பெண்ணின் திருமண வயதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அதுவும் 14 வயது சிறுமியைக் கடத்தி கட்டாய திருமணம் செய்ததை அங்கீகரித்துள்ளது பாகிஸ்தான் நீதிமன்றம். அந்த தீர்ப்பில் அது குறித்து சொன்ன விஷயம் தான் பகீர் ரகமாக இருக்கிறது.

வயசுக்கு வந்தாப் போதும்! பெண்ணை கடத்தி கல்யாணம் பண்ணிக்கலாம்! பகீர் கிளப்பிய நீதிமன்ற தீர்ப்பு!

"பொண்ணு வயசுக்கு வந்தாச்சு இல்லே.. அதனால அந்தப் பெண்ணைக்  கடத்திட்டு போய் கல்யாணம் செய்துக்கிட்டது ஒன்னும் தப்பு இல்லை" என்று பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

வயசுக்கு வந்தாப் போதும்! பெண்ணை கடத்தி கல்யாணம் பண்ணிக்கலாம்! பகீர் கிளப்பிய நீதிமன்ற தீர்ப்பு!

பாகிஸ்தானில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஹுமா என்ற 14 வயது சிறுமி வசித்து வருகிறார். தங்களது பெண்ணை சிலர் கடத்திச் சென்றதாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும், தங்களது பெண்ணைக் கடத்திச் சென்று இஸ்லாம் மதத்துக்கு மாற்றியதுடன், அப்துல் ஜாபா் என்பவருக்கு வலுக்கட்டாயமாக திருமணமும் செய்து வைத்திருப்பதாக பெற்றோர் புகாரில் தெரிவித்து இருந்தனர். இது தொடா்பாக சிந்து ஹைகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஹுமாவுக்கு திருமண வயது வரவில்லை தான். ஆனால் ஹுமா தான் வயதுக்கு வந்து விட்டாரல்லவா? மாதவிடாய் பருவம் வருவதால் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் ஹுமாவின் திருமணம் செல்லும்" என்று தீர்ப்பளித்து அதிரச் செய்துள்ளனர். 

வயசுக்கு வந்தாப் போதும்! பெண்ணை கடத்தி கல்யாணம் பண்ணிக்கலாம்! பகீர் கிளப்பிய நீதிமன்ற தீர்ப்பு!

கடத்தி கட்டாய கல்யாணம் செய்து வைக்கப்பட்ட சிறுமியின் திருமணத்தை நீதிமன்றமே அங்கீகரித்ததுடன், பெண்கள் வயசுக்கு வந்துட்டாலே திருமண வயதை எட்டிவிட்டதாக கருதலாம் என்று தீர்ப்பளித்துள்ளது பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP