என்கவுன்ட்டர் செஞ்சும் பயம் இல்லை... திரிபுராவில் சிறுமி எரித்து கொலை!

child burnt alive in tripura
 | 

என்கவுன்ட்டர் செஞ்சும் பயம் இல்லை... திரிபுராவில் சிறுமி எரித்து கொலை!

தெலங்கானாவில் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற குற்றவாளிகளை காவல்துறையினர் என்கவுன்ட்டர் செய்தனர். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது. குறிப்பாக அப்பகுதி மக்கள் காவல்துறையினரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடினர். 

அந்த கொடிய வடு மறைவதற்குள் அதேபோல் திரிபுராவில் மற்றொரு கொடூரம் நிகழ்ந்துள்ளது. திரிபுராவை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அஜோய் ருத்ரபால் என்பவரை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி  சிறுமியை அழைத்துச்சென்று தனியாக ஒரு வீட்டில் அடைத்துவைத்தார். சிறுமியின் பெற்றோரிடம் 50 ஆயிரம் ரூபாய் தந்தால் மகளை ஒப்படைப்பதாக அஜோய் கூறியுள்ளார். இதற்கிடையில் சிறுமியை அஜோய் மற்றும் அவரது நண்பர்கள் 2 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அஜோயை சந்தித்த சிறுமியின் பெற்றோர் ரூ.17,000 பணம் கொடுத்துள்ளனர். இவ்வளவு தான் தங்களால் புரட்ட முடிந்தது என்றும், உடனே தங்கள் மகளை விட்டுவிடுமாறும் கேட்டுள்ளனர். ஆனால் முழு பணத்தையும் கொடுத்தால் தான் விடுவோம் என்று கூறியுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அஜோர், சிறுமி மற்றும் அவரது தாய் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துள்ளார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் 90% உடல் எரிந்த நிலையில் இருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து அஜோய் வீட்டிற்கு சென்று ஒரு கும்பல், அவரையும் அவரது தாயாரையும் அடித்து உதைத்துள்ளனர். இதனையடுத்து அஜோயை காவல்துறை கைது செய்துள்ளது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP