நாளை இந்த நேரங்களில் மின்சார ரயில்கள் ஓடாது

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் மார்க்கம் உட்பட 43 மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 | 

நாளை இந்த நேரங்களில் மின்சார ரயில்கள் ஓடாது

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் மார்க்கம் உட்பட 43 மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை பேசின் பிரிட்ஜ், வில்லிவாக்கம் வழியாக செல்லும் 18 ரயில்களும், ஆவடி, திருவள்ளூர், வழியாக அரக்கோணம் செல்லும் 6 ரயில்கள் என மொத்தம் 24 ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை செல்லும் 19 ரயில்களும் பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் நலனை கருத்தில் கொண்டு ஆவடி-பட்டாபிராம், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், அரக்கோணம்-திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP