இனி வாட்ஸ்- அப் மூலம் சம்பாதிக்கலாம்! 

இனி வாட்ஸ்- அப் மூலம் சம்பாதிக்கலாம்!
 | 

இனி வாட்ஸ்- அப் மூலம் சம்பாதிக்கலாம்! 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ்-அப் செயலியைப் பயன்படுத்தி வருகிறார்கள். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்-அப் செயலியை வாங்கியதில் இருந்து, அந்நிறுவனம் அதிரடியாக தொடர்ந்து வாட்ஸ்-அப் செயலியில் பல மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. 

இனி வாட்ஸ்- அப் மூலம் சம்பாதிக்கலாம்! 

இந்நிலையில், தொடர்ந்து அளித்து வரும் அப்டேட்களில், புதியதாக இனி வாட்ஸ்-அப் மூலமாகவும் பயனாளர்கள் உட்பட பெரும் நிறுவனங்களும் சம்பாதிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை கொண்டு வர இருக்கிறது பேஸ்புக் நிறுவனம். 

தற்போது வாட்ஸ்-அப் செயலியில் பரவலாக பெரும்பாலானோர்கள் ஸ்டேட்டஸ் மெஸேஜ் வைத்து வருகிறார்கள். பலரும் புகைப்படங்களையும், வீடியோக்களையும், பாடல்களையும் இப்படி ஸ்டேட்டஸ் மெஸேஜ்களாக வைத்து மகிழ்ந்து வருகிறார்கள். இனி, அப்படி நாம் பார்க்கும் பிறரது வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ்களுக்கு இடையே பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களைத் தோன்ற செய்வது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். 

இனி வாட்ஸ்- அப் மூலம் சம்பாதிக்கலாம்! 

இந்த முயற்சியை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இப்படிச் செய்வதன் மூலமாக பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஏதும் பகிரப்படாது என்றும், விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலமாக வாட்ஸ்-அப் பயன்படுத்துபவர்களும் சம்பாதிக்கும் வகையில் இந்த திட்டத்தை முழுமையாக்கும் எண்ணமும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட் இந்த வருடத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP