இனி ஊர் எல்லைக்குள் மது குடித்தால் ரூ.5,000 அபராதம்

ஒரத்தநாடு அருகே உள்ளது தென்னமநாடு கிராமம், இந்த கிராமத்தின் எல்லைக்குள் மது அருந்தினாலோ, அல்லது மது அருந்திவிட்டு சண்டை சச்சரவுகளை செய்தாலோ ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி வசூல் செய்யப்படும் அபராதத் தொகையை ஊர் நலன்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
 | 

இனி ஊர் எல்லைக்குள் மது குடித்தால் ரூ.5,000 அபராதம்

ஒரத்தநாடு அருகே உள்ளது தென்னமநாடு கிராமம், இந்த கிராமத்தின் எல்லைக்குள் மது அருந்தினாலோ, அல்லது மது அருந்திவிட்டு சண்டை சச்சரவுகளை செய்தாலோ ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி வசூல் செய்யப்படும் அபராதத் தொகையை குளம் தூர்வாறுதல், மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட ஊர் நலன்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

தென்னமநாடு ஊராட்சியில் கடந்த 2000-ம் வருடமே மது விலக்குக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அதன்படி, ஊர் எல்லைக்குள் யாரும் மது அருந்தவோ விற்கவோ கூடாது என கட்டுப்பாடு இன்னும் நடைமுறையில் இருக்கிறது.இதனால் எந்த சண்டையும் இந்த ஊரில் இல்லாமல் இருந்தது. திருவிழா என்றால் கூட, போலீஸை பாதுகாப்பு அழைக்காமல் தாங்களே முன் நின்று நடத்தியதாகக் கூறுகின்றனர் 

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ஊர் பொது இடங்களில் பலர் மது அருந்திவிட்டு பாட்டிலை அப்படியே போட்டுவிட்டுச் சென்று விடுகின்றனர்.விவசாய விளை நிலங்களுக்கு அருகே குடித்துவிட்டு பாட்டில் வயலுக்குள் வீசுகின்றனர். வயலில் இறங்கி விவசாயப் பணி செய்யும் விவசாயிகளின் காலில் குத்தி காயம் ஏற்படுத்துகிறது.இதனால் தான் இந்த அவசர அபராத விதியை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதை அருகில் உள்ள கிராமத்தினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP