கூகுளில் இதையெல்லாம் தேடாதீங்க! துரத்தும் ஆபத்துகள்!

தொழில் நுட்ப வளர்ச்சியில் முன்னேறியிருக்கும் இந்தியாவில், செல்போன் இல்லாத ஒருவரை கூட பார்க்கமுடியாத நிலை உள்ளது. ஒரு காலத்தில் ஊருக்கு ஒரு போன் இருந்தது. அது சற்று மாறி தெருவுக்கு ஒரு போன் ஆனது.
 | 

கூகுளில் இதையெல்லாம் தேடாதீங்க! துரத்தும் ஆபத்துகள்!

தொழில் நுட்ப வளர்ச்சியில் முன்னேறியிருக்கும் இந்தியாவில், செல்போன் இல்லாத ஒருவரை கூட பார்க்கமுடியாத நிலை உள்ளது. ஒரு காலத்தில் ஊருக்கு ஒரு போன் இருந்தது. அது சற்று மாறி தெருவுக்கு ஒரு போன் ஆனது. நாளடைவில், வீட்டிற்கு ஒரு போன் என தொழில்நுட்பம் வளர்ந்தது. தற்போது, குடும்பத்தில் ஒவ்வொரு நபருக்கும் ஒரு போன். சிலர் ஒன்றுக்கு 3 போன்களையும் வைத்துள்ளனர். அதுபோக டேஃப், லேப்டாப் என டெக்னாலஜியில் வளர்ந்து கொண்டிருக்கிறது. 

இதனால், முன்பு ஏதேனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், பெரியவர்களிடம் கேட்பார்கள் இல்லையென்றால் புத்தகம் படிப்பார்கள். இப்போது ஏதாவது தெரியவில்லை என்றால் கூகுளிடம் கேட்கின்றனர். சமையல், நடனம், பாட்டு என அனைத்தையும் கூகுளில் தேடியே கண்டுபிடித்துவிடுகின்றனர். இப்படி எல்லாவற்றையும் கூகுளில் தேடும் மக்களுக்கு அதற்கு பின்னால் இருக்கும் ஆபத்துக்கள் புரிவதில்லை.  

கூகுளில் இதையெல்லாம் தேடாதீங்க! துரத்தும் ஆபத்துகள்!

கூகுள் என்பதும் ஒரு ஆன்லைன் தளம் மட்டுமே அதில் பல வலைதளங்கள் உள்ளது. இதனால் வரும் பிரச்சனை என்ன என்பதை கீழே பார்ப்போம். 

கூகுள் வழியாக உங்கள் வங்கியின் ஆன்லைன் பேக்கிங் தளங்களை தேட வேண்டாம். ஏனெனில் கூகுளில் பல போலியான ஆன்லைன் பேங்கிங் வலைத்தளங்கள் உள்ளன. பெரும்பாலான போலியான வலைத்தளங்கள் ஆனது குறிப்பிட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் போல தோற்றமளிக்கும். ஆகவே உங்கள் பணத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய உங்கள் வங்கியின் அதிகாரபூர்வமான ஆன்லைன் வங்கி போர்ட்டலின் URL ஐ கூகுளில் உள்ளிடவும். இல்லையெனில் ஆன்லைன் திருடர்களின் கைகளில் தானாகவே போய் சிக்கிகொள்வீர்கள்.

கூகுளில் இதையெல்லாம் தேடாதீங்க! துரத்தும் ஆபத்துகள்!

கூகுள் வழியாக கஸ்டமர் கேர் எண்களை தேட வேண்டாம். ஏனெனில், மோசடிகளில் ஈடுபடுவபர்கள் போலியான வணிக பட்டியல்களையும், கஸ்டமர் கேர் எண்களையும் வலைத்தளங்களில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். அதை உண்மை என்று நம்பி அவர்களின் கையில் சிக்கும் வாடிக்கையாளர்களிடம் விலாசம் அல்லது வங்கி விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் தொடங்கி பணம் பறிப்பு மோசடிகள் வரை நடைபெறுகிறது.

ஆப்ஸ் மற்றும் சாப்ட்வேர் டவுன்லோட்டிற்காக கூகுளை அணுக வேண்டாம். நீங்கள் எதாவதொரு மொபைல் ஆப்பை டவுன்லோட் செய்ய விரும்பினால், தயவு செய்து வெறுமனே அதன் பெயரை டைப் செய்து கூகுள் வழியாக தேட வேண்டாம். அது Android ஆப் என்றால் Google Play-விற்கு செல்லவும் அல்லது அது ஐஓஎஸ் ஆப் என்றால் ஐபோன்களுக்கான ஆப் ஸ்டோருக்கு செல்லவும், அதாவது அந்தந்த இயங்குதளத்திற்கான அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோருக்கு செல்லவும் மாறாக வெறுமனே கூகுள் வழியாக ஆப்ஸ்களை தேடினால், மால்வேர் உள்ளடக்கத்துடன் கூடிய போலி ஆப்ஸ்களை நீங்கள் இன்ஸ்டால் செய்வதற்கான ஆயிரமாயிரம் வழிகள் ரெடியாக இருக்கும்.

கூகுளில் இதையெல்லாம் தேடாதீங்க! துரத்தும் ஆபத்துகள்!

மருந்துகள் அல்லது மருத்துவ அறிகுறிகளை கூகுளில் தேட வேண்டாம். கூகுள் என்பது மருந்துகளைத் தேடுவதற்கான ஒரு இடம் அல்ல. மெடிக்கல் ஸ்டோர்களிலேயே தற்போது மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்துகள் கொடுப்பதில்லை. காரணம் நோய் என்ன என்பதை சரியாக தெரிந்து கொள்ளாமல் மாற்று மருந்தை சாப்பிட்டு பலர் உயிரிழக்கும் சூழல் கூட ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது, ஏதோ ஒரு வலைதளத்தில் உள்ள பதிவை வைத்து எப்படி மருந்து வாங்க முடியும்? அது சரியான மருந்து தான என்பது கூட தெரியாது.

ஊட்டச்சத்து அல்லது எடை குறைப்பு பற்றிய மருத்துவ ஆலோசனைகளை கூகுள் வழியாக தேட வேண்டாம்.  நீங்கள் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், மருத்துவரிடம் செல்லுங்கள். ஒருவேளை நீங்கள் உங்களின் உணவு பழக்கங்களை மாற்ற விரும்பினால், ஒரு டயட்டீஷியனை சென்று பார்க்கவும். மாறாக கூகுள் ஆலோசனையை கேட்டு வழிமுறைகளை பின்பற்றினால் பின்பு, பக்கவிளைவுகள் ஏற்பட்டு அதனால் செலவுகள் தான் அதிகரிக்கும்.

கூகுள் வழியாக நிதி மற்றும் பங்குச்சந்தை சார்ந்த தீவிரமான ஆலோசனை அல்லது வழிகாட்டியை தேட வேண்டாம். மருத்துவ ஆலோசனைகளை போலே, நிதி சார்ந்த விடயங்களும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும், ஏனெனில் எல்லோருமே ஒரே மாதிரியான சம்பளத்தை வாங்குவதில்லை. ஒரே நேரத்தில் அனைவரையுமே பணக்காரர்களாக மாற்றும் ஒரு முதலீட்டுத் திட்டம் என்பது இந்த உலகத்திலேயே கிடையாது, ஒருபோதும் இருக்கவும் முடியாது.

கூகுளில் இதையெல்லாம் தேடாதீங்க! துரத்தும் ஆபத்துகள்!

கூகுள் வழியாக அரசாங்க வலைத்தளங்களைத் தேட வேண்டாம். ஏனெனில் ஆன்லைன் பேங்கிங் வலைத்தளங்களைப் போலவே, நகராட்சி வரி, மருத்துவமனைகள் போன்ற அரசாங்க வலைத்தளங்களும் கூட ஆன்லைன் மோசடி செய்பவர்களின் பிரதான இலக்குகளாகும். எந்த வலைத்தளம் அசல் என்பதை அடையாளம் காண்பது கடினம் என்பதால், எந்த குறிப்பிட்ட அரசாங்க வலைத்தளத்தையும் வெறுமனே கூகுளில் டைப் செய்து தேட வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறீர்கள், மாறாக அதிகாரபூர்வமான வலைத்தளத்தின் யூஆர்எல்-ஐ அறிந்து வைத்துக்கொள்ளுங்கள், அதை நேரடியாக டைப் செய்து அதற்குள் உள்நுழையவும்

கூகுள் வழியாக சோஷியல் மீடியாக்களுள் லாகின் செய்யாதீர்கள். ஃபேஸ்புக் ஆக இருந்தாலும் சரி, இன்ஸ்டாகிராமாக இருந்தாலும் சரி, எப்போதுமே உங்களின் ப்ரவுஸரில் உள்ள அட்ரெஸ் பாக்ஸில் URL ஐ நேரடியாக டைப் செய்து குறிப்பிட்ட சமூக ஊடக அக்கவுண்ட்களுக்குள் செல்லுங்கள். அதற்கு பதிலாக கூகுளில் டைப் செய்து லாகின் பக்கத்தை தேடினால், நீங்கள் ஃபிஷிங் போன்ற ஆன்லைன் மோசடிக்குள் சிக்க நேரிடலாம்.

கூகுள் வழியாக ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள் அல்லது சலுகைகளை தேட வேண்டாம். குறிப்பிட்ட ஈ-காமர்ஸ் வலைத்தளங்களில் அட்டகாசமான சலுகைகள் என்கிற செய்தி இணைப்புகளை கிளிக் செய்யலாம். ஆனால் குறிப்பிட்ட சலுகைகளை பெற இதற்குள் நுழையவும் அல்லது இங்கே கிளிக் செய்யவும் என்று கூறும் இணைப்புகளை தயவு செய்து கிளிக் செய்ய வேண்டாம். ஏனெனில் கூகுள் இதுபோன்ற போலி வலைப்பக்கங்களால் நிறைந்துள்ளது, இது மற்றொரு உன்னதமான மோசடி ஆகும். இதில் மக்கள் தங்கள் ஆன்லைன் வங்கி உள்நுழைவு விவரங்களை இழக்க நேரிடுகிறது. 

கூகுளில் இதையெல்லாம் தேடாதீங்க! துரத்தும் ஆபத்துகள்!

கூகுள் வழியாக இலவச ஆன்ட்டி-வைரஸ் ஆப்ஸ் அல்லது சாப்டவேர்களை தேட வேண்டாம்.  எந்தவொரு வியாபாரியும் எதையுமே இலவசமாக கொடுப்பதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படியானதொரு தந்திரம் மிக்க வியாபார உலகில், ஆன்லைன் வழியாக அதுவும் கூகுள் தேடல் வழியாக இலவச வைரஸ் தடுப்பு பயன்பாடுகள் அல்லது மென்பொருளைத் தேடுவதென்பது எங்கு சென்று முடியும் என்று தெரியுமா? - போலியான தயாரிப்புகளை டவுன்லோட் செய்து டேட்டாவை இழப்பீர்கள் அல்லது கிளிக் செய்து-கிளிக் செய்து ஏதோவொரு மோசடிக்காரன் பணம் சம்பாதிப்பதற்கு உதவுவீர்கள்.

ஆன்லைனில் ஷாப்பிங்கிற்கான தள்ளுபடி கூப்பன் குறியீடுகளை கூகுளில் தேட வேண்டாம். குறிப்பிட்ட ஷாப்பிங்கில் தள்ளுபடியை பெறுவதற்கான ஒரு கூப்பன் குறியீடு ஆனது உங்களுக்கு தானாக கிடைத்தால் அதில் எந்த சிக்கலும் இல்லை. மாறாக தள்ளுபடிகளுக்கான கூப்பன்களை கூகுளில் தேடினால், நீங்கள் போலி வலைத்தளங்களில் இறங்கலாம், அங்கே போலியான கூப்பன்கள் ஆனது உங்களுக்கு மிகவும் மலிவான விலைக்கு விற்கப்படலாம். அவ்வளவு ஏன்? உங்களின் வங்கி விவரங்கள் கூட திருடப்படலாம்.

கூகுள் வழியாக ஆபாசமாக எதையும் தேட வேண்டாம். கூகுள் விளம்பரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அறியாதவர்களுக்கு, கூகுளில் நீங்கள் தேடிய குறிப்புகள், பிற்காலத்தில் நீங்கள் பார்வையிடும் மற்ற வலைத்தளங்களில் விளம்பரமாக காட்சிப்படும். அதாவது உங்கள் கூகுள் தேடல் வரலாற்றின் அடிப்படையின்கீழ் உங்களுக்கான விளம்பரங்கள் ஆனது பரிந்துரைக்கபடும். ஒருவேளை நீங்கள் அலுவலகத்தில் இருக்கும் போது அல்லது குடும்பத்தினரின் முன்னால் இருக்கும் போது அத்தியாவசியத்திற்காக தேடும் போது, உங்கள் ஆபாச தேடல் கண் முன் வந்து உங்களை அவர்களிடம் காட்டிக்கொடுத்துவிடும்.

ஆகவே, கூகுளில் கலைகளையும், படிப்புகளையும், அதிசயங்களையும், ஆராய்ச்சிகளையும் தெரிந்து கொண்டு உங்கள் திறமைகளையும், புத்தியையும் வளர்த்து கொள்ளுங்கள். அதைவிடுத்து நேரம் போக்கிற்காக இது போன்று தேடி உங்களுக்காகவே காத்திக்கொண்டிருக்கும், வலைதளங்களின் மோசடிகாரர்களிடம் சிக்கிவிடாதீர்கள். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP