2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் உண்டா?  உயா்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் உண்டா? உயா்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
 | 

2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் உண்டா?  உயா்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

பெரும்பாலான அரசு ஊழியர்களின் குடும்பங்களில், ஓய்வூதியம் பெறுவதில் மட்டுமல்லாமல், சொத்துக்களைப் பெறும் விஷயத்திலும் இரண்டாவது மனைவியை ஓரங்கட்டியே வைத்திருக்கின்றனர்.  இந்நிலையில், முதல் மனைவி கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்றாலோ அல்லது முதல் மனைவி இறந்த பின்னர், கணவர் இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்ட பிறகு, இரண்டாவது மனைவி குடும்ப ஓய்வூதியம் பெறலாம் என உயா்நீதிமன்றம் அதிரடியாய் உத்தரவிட்டுள்ளது.

2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் உண்டா?  உயா்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தருமபுரியில், மொரப்பூா் பஞ்சாயத்து யூனியனில் கிராமப்புற மருத்துவராக பணியாற்றி வந்தவர் டாக்டா் சின்னசாமி. இவருக்கு முதல் மனைவியும், அவர் மூலமாக பிறந்த 3  பெண் குழந்தைகளும் இருந்த போதும், 1975ம் ஆண்டு சரோஜினி தேவி என்கிற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சின்னசாமிக்கும், சரோஜினி தேவிக்கு இரண்டாவது திருமணம் மூலமாக இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில் சின்னசாமியின் முதல் மனைவி இறந்து விட்டார். பின்னர், கடந்த 1999ம் ஆண்டு சின்னசாமி அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.  சின்னசாமி, பணியில் இருந்து ஓய்வு பெறும் போது, தனது இரண்டாவது மனைவி சரோஜினி தேவியை குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான  வாரிசுதாரராக நியமித்து இருந்தார். இந்நிலையில், சின்னசாமி கடந்த 2009ம் ஆண்டு இறந்து விட்டார். சின்னசாமி இறந்ததையடுத்து, தனக்குத் தொடர்ந்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சரோஜினி தேவி மனு கொடுத்தார். ஆனால், இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க ஓய்வூதிய விதியில் வழியில்லை எனக் கூறி, சரோஜினி தேவியின் மனுவை நிராகரிக்கத்து விட்டனர். இதனை எதிர்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் சரோஜினி தேவி வழக்குத் தொடா்ந்தார்.

2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் உண்டா?  உயா்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், 'ஓய்வூதிய விதிகளில் இரண்டாவது மனைவி சட்டப்பூா்வமான மனைவி இல்லை. எனவே, அவா் வாரிசு உரிமை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. கடந்த 1975ம் ஆண்டு முதல் கடந்த 2009ம் ஆண்டு சின்னசாமி இறக்கும் வரை சரோஜினி தேவி மனைவியாக அவருடன் வாழ்ந்துள்ளார். அதனால், முதல் மனைவி விவாகரத்து வாங்கினாலோ அல்லது இறந்து விட்டாலோ நீண்ட நாட்கள் கணவருடன் வாழ்க்கை நடத்திய 2வது மனைவிக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்வது சட்டவிரோதம் தான். ஆனால் முதல் மனைவி இறந்த நிலையில் உரிமை கோரும் மனுதாரா் போன்றவா்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, அவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், மனுதாரருக்கு 2009ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி முதல் ஓய்வூதியத்தைக் கணக்கிட்டு, மொத்த ஓய்வூதியத்தையும் 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் பிறப்பித்த உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP