கொரோனா பாதித்த குழந்தைகளை மகிழ்விக்க குழந்தையாக மாறிய மருத்துவர்கள்..!

கொரோனா வைரஸ் தொற்று குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும் சீன மருத்துவர்கள், தங்களுடைய பாதுகாப்பு உடை மீது சில கார்டூன் படங்களை வரைந்து கொண்டு மருத்துவத்திற்கு செல்கின்றனர். இந்த ஓவியங்களையும் பார்க்கும் குழந்தைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
 | 

கொரோனா பாதித்த குழந்தைகளை மகிழ்விக்க குழந்தையாக மாறிய மருத்துவர்கள்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் நோக்கில், சீன மருத்துவர்கள் செய்யும் வேடிக்கையான செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனா முடங்கிப் போயுள்ளது. தற்போது அந்நாட்டில் மட்டுமே இந்த வைரஸின் தொற்று அதிகமாக உணரப்பட்டு வரும் நிலையில் மக்கள் பலரும் பீதியில் உள்ளனர்.

                                          கொரோனா பாதித்த குழந்தைகளை மகிழ்விக்க குழந்தையாக மாறிய மருத்துவர்கள்..!

இதுவரை இந்த வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு மருந்து கண்டுப்பிடிக்கப்படவில்லை. இதனால் சீனாவில் நாள்தோறும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை.இந்த வைரஸ் தொற்றால் சீனாவில் தற்போது வரை 2007 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 75,318 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 13,332 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

 

கொரோனா வைரஸ் தொற்று குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் எளிதில் பரவக்கூடும் என்பதால், பெரும்பாலும்  நோய் தொற்று ஏற்பட்டவர்களில் அவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.இந்நிலையில் குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும் சீன மருத்துவர்கள், தங்களுடைய பாதுகாப்பு உடை மீது சில கார்டூன் படங்களை வரைந்து கொண்டு மருத்துவத்திற்கு செல்கின்றனர். இந்த ஓவியங்களையும் பார்க்கும் குழந்தைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

                                        கொரோனா பாதித்த குழந்தைகளை மகிழ்விக்க குழந்தையாக மாறிய மருத்துவர்கள்..!

இதுதொடர்பான வீடியோ சமூவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த காணொளியை காணும் பலரும் குழந்தைகள் பூரண நலம்பெற வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP