சர்க்கரை நோயாளி ஏன் இனிப்பு சாப்பிடகூடாது தெரியுமா ?

இனிப்பு நிறைந்த சப்போட்டா, மாம்பழம் போன்ற பழங்களை தவிர்த்து மற்ற பழங்களை உணவு இடைவேளையில் எடுத்துகொள்ளலாம். உணவோடு எடுக்க கூடாது. இப்படி கலந்து சாப்பிடும் போது அவை இரத்தத்தில் மெதுவாகவே சர்க்கரையை கலக்கிறது. ஆனால் இனிப்பு பொருள்களை எடுக்கும் போது அவை வேகமாக இரத்தத்தில் குளுக்கோஸாக சேமிக்கப்படுகிறது. அதனால் தான் இனிப்பு உணவுகளை சர்க்கரை நோயாளிகள் எடுக்க கூடாது என்கிறது மருத்துவம்.
 | 

சர்க்கரை  நோயாளி ஏன் இனிப்பு சாப்பிடகூடாது தெரியுமா ?

நாம் உண்ணும் உணவு பொருள்கள் அனைத்திலுமே சர்க்கரை சத்து உண்டு. இவை கார்போஹைட்ரேட் என்று சொல்கிறோம்.  இவையெல்லாம் கூட்டு சத்தாக இருப்பவை. இதில் குளுக்கோஸ் என்பதும் ஒரு பொருள். ஆனால் இனிப்புகள் அப்படி அல்ல. அவை குளுக்கோஸ் மட்டுமே. 

சர்க்கரை நோய் வந்தாலே இனிப்பு பொருள்களை எடுக்க கூடாது என்று சொல்லும் போது  சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம், தேன் எடுக்கலாமா என்ற கேள்வி வரும். ஆனால் சர்க்கரை கட்டுப்படாமல் இருக்கும் போது  கண்டிப்பாக தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். 

                                                சர்க்கரை  நோயாளி ஏன் இனிப்பு சாப்பிடகூடாது தெரியுமா ?

உணவு பொருள்களிலும் சர்க்கரை சத்து உண்டு ஆனால் இனிப்பு சேர்த்த பொருளை மட்டும் ஏன் எடுக்க கூடாது என்று கேட்பவர்கள் உண்டு.  நாம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசி, தானியம், கோதுமை அனைத்திலுமே சர்க்கரை சத்து உண்டு. ஆனால் இவை கூட்டு பொருளாக நிறைந்திருக்கிறது. இவை எடுக்கும் போது உள்ளுக்குள் செரிமானத்துக்கு மாற்றப்படும் போது சர்க்கரை மாலிக்குள் ஆக மாறும். நேரடியாக மாறாது என்பதால் இந்த உணவுகளை குறைவாக  எடுத்துகொள்வது நல்லது. புழுங்கல் அரிசி, கைக்குத்தல் அரிசியான மாப்பிள்ளை சம்பா, கைகுத்தல் அரிசி போன்ற பாரம்பரிய அரிசி வகைகளை எடுத்துகொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. 

ஆனால் காய்கறிகளையும் குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை எடுத்துகொள்வதால் இவை செரிமானத்தை தாமதப்படுத்தி குளுக்கோஸை உடனடியாக இரத்தத்தில் கலக்காது. அதனால் காய்கறிகளை உணவோடு கலந்து  சாப்பிடும் போது அரிசியில் இருக்கும் சர்க்கரை மெதுமெதுவாக ஏறும். அதே போன்று பழங்களும் எடுக்கலாம். அதிகப்படியான இனிப்பு நிறைந்த சப்போட்டா, மாம்பழம் போன்ற பழங்களை தவிர்த்து  மற்ற பழங்களை உணவு இடைவேளையில்  எடுத்துகொள்ளலாம். உணவோடு எடுக்க கூடாது. இப்படி கலந்து சாப்பிடும் போது அவை இரத்தத்தில்  மெதுவாகவே சர்க்கரையை கலக்கிறது. ஆனால் இனிப்பு பொருள்களை எடுக்கும் போது அவை வேகமாக இரத்தத்தில் குளுக்கோஸாக சேமிக்கப்படுகிறது. அதனால் தான் இனிப்பு உணவுகளை சர்க்கரை நோயாளிகள் எடுக்க கூடாது என்கிறது  மருத்துவம்.   

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP