பெற்றோர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்!

கோவையில் மதுபான கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் அவரது பெற்றோர்கள் முன்பே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பெற்றோர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்!

கோவையில் மதுபான கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் அவரது பெற்றோர்கள் முன்பே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் போத்தனூர் ஸ்ரீராம் பகுதியை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ (28), இவர் நேற்று நள்ளிரவில் போத்தனூர் பகுதியில் உள்ள மதுபான கடையில் தன்னுடைய சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, அங்கே மது அருந்தி கொண்டிருந்த சிலருடன் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கிருந்து வெளியே வந்த ஜான்பிரிட்டோவை தகராறு செய்தவர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அவர் வீட்டிற்குள் செல்லும் போது, பின்தொடர்ந்து வந்த 4 நபர்களும் ஜான் பிரிட்டோ மற்றும் அவரது பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த நபர்கள் ஜான்பிரிட்டோ மற்றும் அவரது நண்பரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் ஜான்பிரிட்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், "ஜான் பிரிட்டோ என்பவர் முன்னாள் குற்றவாளி என்பதும் உன்னி கிருஷ்ணன் என்ற கஞ்சா வியாபிரியை ஜான்பிரிட்டோ மற்றும் அவர்களது நண்பர்கள் கொலை செய்ததாக ஒரு வழக்கு நிலைவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.  மேலும் தையல் தொழில் செய்துவரும் இவர் அதனுடன் கஞ்சா வியாபாரமும் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP