கால்வாயில் மிதந்த இளம் பெண்! பலாத்காரம் செய்து கொலை?!

வேலூர் மாவட்டம் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் ஒரு பெண் சடலம் கவிழ்ந்த நிலையில் மிதப்பதை கண்ட பொதுமக்கள் இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
 | 

கால்வாயில் மிதந்த இளம் பெண்! பலாத்காரம் செய்து கொலை?!

வேலூர் மாவட்டம் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் ஒரு பெண் சடலம் கவிழ்ந்த நிலையில் மிதப்பதை கண்ட பொதுமக்கள் இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இறந்த பெண் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்றும் அந்த பெண் சடலம் அரை நிர்வாணத்துடன் மீட்கப்பட்டதால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு சுமார் 30 வயது இருக்கும் என்றும் அவர் இறந்து 2 நாட்களுக்கு மேலாகியிருக்கும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறந்த பெண் சிவப்பு கலர் சுடிதார் அணிந்திருந்தார், பாப் கட்டிங் வெட்டியிருந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இறந்தவரின் புகைப்படத்தை நோட்டீஸ்சாக ஒட்டி வேலூரில் மருத்துவ சிகிச்சைக்காக வந்து தங்கியுள்ள வடமாநிலத்தவரிடம் விசாரிக்கவும் போலீஸ் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக அந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP