அரசியல் கட்சியில் சேர்த்துவிட்டால்  டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம் என  இளைஞர்கள்  நினைக்கிறார்கள் : தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக முதல்வருக்கு நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ள நிலையில், அரசியல் கட்சியில் சேர்த்துவிட்டால் டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம் என இளைஞர்கள் நினைப்பதாக கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 | 

கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்லூரியின்  நிறுவனர் தின விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். இதில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், 
நான் தமிழகத்திற்கு என்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன், என்னை மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட பாசமிகு சசோதரி என்று அழைப்பதை தான் நான் அதிகம் விரும்புகிறேன் என தெரிவித்தார்.

அரசியல் கட்சியில் சேர்த்துவிட்டால்  தானாக டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம் என இன்றைய இளைய தலைமுறையினர்  நினைப்பதாகவும், மேடையில் இருப்பவர்கள் கடின உழைப்பால் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் எனக் கூறினார். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும்,  குடும்ப வாழ்க்கையின்  முக்கியதுவத்தையும் அன்பின் பறிமாற்றத்தின் முக்கிய துவத்தையும் இன்றைய  இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார். 

எனது உயரத்தை, நிறத்தை, முடியை  கிண்டல் செய்தார்கள்,  இன்று நான் மேடையில் இருந்து கொண்டு அவர்களை  கிண்டல் செய்கிறேன். எனவே தடைகளை தாண்டி குறிக்கோள் நோக்கி மாணவர்கள் எப்போதும் பயணிக்க வேண்டும் என தெரிவித்தார். சீன பிரதமர் வருகையின் போது பிரதமர் மோடி வேட்டி அணிந்து தமிழகத்தின் பெருமையை எடுத்துக்காட்டியது போல ,  தமிழ் மண்ணுக்கும் தெலுங்கானாவிற்கும் பாலமாக நான்  இருப்பேன் எனவும் தெரிவித்தார். விழாவில் பேசும் போது தமிழகத்தில் என்னை அக்கா என்று அழைத்தது போல,  தெலுங்கானாவிலும் என்னை அக்கா என்று தான் அழைக்கிறார்கள் எனக் கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP