யோகா போட்டி : ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு

கும்பகோணத்தை அடுத்த ஆடுதுறையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற யோகா போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 | 

யோகா போட்டி : ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு

கும்பகோணத்தை அடுத்த ஆடுதுறையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற யோகா போட்டியில் 200 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கும்பகோணத்தை அடுத்த ஆடுதுறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா நடைபெற்றது.

யோகா போட்டி : ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள், முதியவர்கள் என பலர் கலந்துகொண்டு இடைவிடாத யோகாசனங்கள் செய்து அசத்தினர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் இயற்கை உணவுகள் மற்றும் இயற்கை பானங்கள் வழங்கப்பட்டன.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு நினைவு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP