வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்!

வாட்ஸ்அப்பில் பரவி வரும் அவதூறு செய்தியால் திருச்சியை சேர்ந்த இரண்டு பெண்கள் இன்று வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
 | 

வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்!

வாட்ஸ்அப்பில் பரவி வரும் அவதூறு செய்தியால் திருச்சியை சேர்ந்த இரண்டு பெண்கள் இன்று வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர்கள் அனிதா(35), மோனிஷா (33). இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் (இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட்) விற்பனை செய்யும் பணி செய்து வந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு இந்த இரண்டு பெண்களும், திருவானைக்காவல் பகுதியில் உள்ள வீட்டில் விற்பனைப்பொருட்கள் குறித்து விளக்கமளித்து கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்துள்ளார்.

மேலும், இவர்கள்  ஒரு toll-free எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க சொல்வார்கள். அப்படி நீங்கள் மிஸ்டுகால் கொடுத்தால் உங்கள் கணக்கில் உள்ள பணம் அனைத்தும் எடுத்து விடுவார்கள்" என்ற வாய்ஸ் மெசேஜ்யுடன் அவர்கள் புகைப்படத்தையும் வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளார்.  அவர் பதிவிட்ட போட்டோ மற்றும் வாய்ஸ் மெசேஜ் தற்போது உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. இதனால் அந்த இரண்டு பெண்களும் தற்போது வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வேலைக்கு செல்லாத காரணத்தினால், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த இரு பெண்களும், தங்கள் மீது அவதூறு பரப்பிய அந்த மர்ம நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜிடம் புகார் கொடுத்துள்ளதோடு, அந்த நபர் மீண்டும், 'நாங்கள் நல்லவர்கள்' என்று ஒரு பதிவை இட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது குறித்து அந்த பெண்கள் கண்ணீர் மல்க கூறியதாவது: தினமும், 200 ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில்தான் நாங்கள் இந்த வேலைக்கு சென்று வந்தோம். இதுதான் எங்கள் வாழ்வாதாரமாக இருக்கிறது. இவர் பதிவிட்ட காரணத்தினால் நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே தயவு செய்து இந்த பதிவை யாரும் பகிர வேண்டாம். மேலும் இந்த பதிவு உங்களுக்கு வந்தால், இது தவறான தகவல் என்று பதிவிடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP