சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த பெண் !

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
 | 

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த பெண் !

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சேலம் மாமாங்கம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி.  இவருடைய கணவர் உயிரிழந்த நிலையில் 3 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.  அந்த வீட்டை உரிமையாளர் விற்பதாக தெரிவித்துள்ளார். அதை தானே வாங்கிக் கொள்வதாக கூறி பூங்கொடி எட்டரை லட்சம் ரூபாய் வீட்டு உரிமையாளரிடம் கொடுத்ததாக தெரிகிறது. மீதமுள்ள பணத்தை சில நாட்களுக்குள் கொடுத்துவிடுவதாக தெரிவித்துள்ளார்.  இதற்கிடையே அந்த வீட்டின் உரிமையாளர் வேறு ஒருவருக்கு வீட்டை விற்று விட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பூங்கொடி சூரமங்கலம் காவல்  காவல் நிலையத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.  அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே மனு கொடுக்க வந்த பூங்கொடி மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு தற்கொலை முயன்றும் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் பூங்கொடி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் மனு அளிக்க வந்தார் அப்போது தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு  முயன்றார். இதனை பார்த்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் பூங்கொடி மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP