மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு!

கும்பகோணம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 மாத சிசு இறந்து பிறந்ததையடுத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது.
 | 

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு!

கும்பகோணம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 மாத சிசு இறந்து பிறந்ததையடுத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வேட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (26). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனை பயன்படுத்தி கொண்ட அதே பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஜெயராமன், அவருடன் பழகி  அவரை கர்ப்பமாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிரியாவுக்கு அவரது வீட்டில் 5 மாத சிசு இறந்து பிறந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பிரியாவின் தாய் அவரிடம் விசாரித்துள்ளார்.

அப்போது, ஜெயராமன் மகளிடம் தவறாக பழகியது தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரியாவின் தாயார் இது குறித்து பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பாதிக்கப்பட்ட பெண் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP