திருச்சி அரசு மருத்துவமனையில் ஃபேன் கழன்று விழுந்து பெண் படுகாயம்!

திருச்சி அரசு மருத்துவமனையில் மின் விசிறி கழன்று விழந்ததில் பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

திருச்சி அரசு மருத்துவமனையில் ஃபேன் கழன்று விழுந்து பெண் படுகாயம்!

திருச்சி அரசு மருத்துவமனையில் மின் விசிறி கழன்று விழந்ததில் பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி அரசு மருத்துவமனையில் ஜேம்ஸ் மேரி என்பவர்  உடல் நலம் பாதித்த அவரது மகள் அனுஸ்ரீக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்றுள்ளார். உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அனுஸ்ரீக்கு உதவியாக ஜேம்ஸ் மேரி இருந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை மருத்துவமனையில் ஜேம்ஸ் மேரியின் தலைக்கு மேல் சுற்றி கொண்டிருந்த மின்விசிறி திடீரென கழன்று அவரது தலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. 

இதில் ஜேம்ஸ் மேரி படுகாயமடைந்தார். இந்நிலையில், தலையில் படுகாயமடைந்த மேரிக்கு ஸ்கேன் செய்ய சென்றபோது ரூ.500 கட்டணம் கேட்டுள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஃபேன் தலையில் விழுந்த நிலையில்  மருத்துவமனை நிர்வாகம் ஸ்கேன் செய்ய கட்டணம் கேட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP