தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்

சித்த மருத்துவர் தவறான சிகிச்சை அளித்ததால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான சிகிச்சை அளித்த மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 | 

தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்

சித்த மருத்துவரின் தவறான சிகிச்சையால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை புதூர் நேதாஜி நகரை சேர்ந்த கணேசன், மல்லிகா தம்பதியரின் மகள் சத்யபிரியா (20). இவர் கோவை அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பு படித்து வந்தார். மாதவிடாய் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த சத்ய பிரியா உறவினரின் அறிவுறுத்தலின் பேரில் செல்வபுரம் பகுதியில் உள்ள மனோன்மணி சித்த வைத்திய சாலையில் மருத்துவர் குருநாதனிடம் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

சித்த மருந்தின் தாக்கம் காரணமாக சத்யபிரியாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சத்தியப்பிரியா ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மே 1ஆம் தேதி சித்த வைத்தியர் குருநாதன் மீது சத்யப்பிரியாவின் பெற்றோர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் கடந்த 31ஆம் தேதி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். 

தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்யப்பிரியா இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சித்த வைத்தியர் குருநாதனை கைது செய்ய வலியுறுத்தியும், செல்வபுரம் காவல்நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவை அரசு மருத்துவமனை முன்பு சத்யப்ரியாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP