பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வன்புணர்ச்சி: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி வன்புணர்ச்சி செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வன்புணர்ச்சி: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி வன்புணர்ச்சி செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே ஆட்டையாம்பட்டியை சேர்ந்த  சரவணன் என்பவரின் 15 வயது மகள்  அருகில் உள்ள அரசுப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் கவுண்டர் காட்டை சேர்ந்த பழனிசாமி மகன் மோகன்ராஜ் (21). விசைத்தறி தொழிலாளியான இவர்  சரவணனின் மகளிடம் நட்பு முறையில் பழகி, ஆசை வார்த்தைகள் கூறி வன்புணர்ச்சி செய்துள்ளார். இதனால் கவி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன் கவியை மோகன்ராஜ் கூட்டி சென்றுவிட்டார்.

இதுகுறித்து பள்ளி மாணவியின் தந்தை சரவணன் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து பள்ளி மாணவியை  ஏமாற்றிய வாலிபர்  மோகன்ராஜ்யை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் .5 மாத கர்ப்பினியான இளம்  பெண்ணை சேலம் அரசு மகளிர் காப்பகத்தில் போலீசார் சேர்த்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP