குடியிருப்புக்குள் குட்டியுடன் புகுந்த காட்டு யானை!

கோவையை அடுத்த மதுக்கரை பகுதியில் குட்டியுடன் திரிந்த காட்டு யானையை வனத்துறையினர் வாகனங்கள் மூலமாக ஒலி எழுப்பி வனப்பகுதிக்குள் விரட்டினர். குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
 | 

குடியிருப்புக்குள் குட்டியுடன் புகுந்த காட்டு யானை!

கோவையை அடுத்த மதுக்கரை பகுதியில் குடியிருப்புப் பகுதிகளில் குட்டியுடன் திரிந்த காட்டு யானையை வனத்துறையினர் வாகனங்கள் மூலமாக ஒலி எழுப்பி வனப்பகுதிக்குள் விரட்டினர்.

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள காந்தி நகரில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஒரு காட்டு யானை, தனது குட்டியுடன் குடியிருப்பு பகுதிகளில் வலம் வந்தது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், நேற்றிரவு ஊருக்குள்  வலம் வந்த காட்டு யானை மற்றும் குட்டியை வனத்துறையினர் வாகனங்களின் ஒலிபெருக்கி மூலம் ஒலி எழுப்பியும், பட்டாசுகளை வெடித்தும் வனப்பகுதிக்கு விரட்டினர். 

இதுபோன்று அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் புகுந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினரும் இரவு நேரங்களில் ரோந்து பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP