குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு யானை கூட்டம்

கோவை துடியலூரை அடுத்த கதிர் நாயக்கன் பாளையம் பகுதியில் நள்ளிரவில் 6 காட்டு யானைகள் கூட்டம் குடியிருப்புப் பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலாவருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு யானை கூட்டம்

கோவை துடியலூரை அடுத்த கதிர் நாயக்கன் பாளையம் பகுதியில் நள்ளிரவில் 6 காட்டு யானைகள் கூட்டம் குடியிருப்புப் பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலாவருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் நாய்களை துரத்தும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 பகுதியில் நேற்று நள்ளிரவில் சுமார் 6 யானைகள் கொண்ட காட்டு யானை கூட்டம் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் வந்ததுள்ளது. யானைகளை பார்த்து அங்கிருந்த தெரு நாய்கள் குறைத்ததால் அதில் கோபம் கொண்ட ஒரு ஆண் யானை நாய்களை துரத்திய காட்சியும் அதனைத் தொடர்ந்து அதனுடன் வந்திருந்த இரண்டு குட்டிகளுடன் கூடிய 5 யானைகள் பின்னால் சென்றதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நாய்கள் குறைத்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்தபோது 6 யானைகள் கொண்ட கூட்டம் குடியிருப்பு பகுதிகளில் சர்வசாதாரணமாக சென்றதைக் கண்டு மிகுந்த அச்சம் அடைந்தனர். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த வனத்துறையினர் நள்ளிரவில் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியினை மேற்கொண்டனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானைகள் மலைப்பகுதியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதிக்கு உணவு தேடி வருகிறது. எனவே வனப்பகுதியில் அதற்கான உணவுகளை ஏற்பாடு செய்து விட்டால் அவைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராது என்றும் உயிரிழப்புகள் ஏற்படும் முன் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் வன எல்லைகளில் அகலிகள் அமைத்து தடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

 

newstm.in

 

 

  <>

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP